Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலக சந்தை எதிரொலி.. தங்கம் விலை உயருமாம்!

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,300 டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையைப் பொறுத்தவரை உலக சந்தையில் கடந்த மார்ச் மாதத்தில் அதிகபட்சமாக ஒரு அவுன்ஸ் தங்கம் 1,280.60 டாலராக இருந்தது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,265.61 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ரிஸர்வ் வங்கிகள் அடுத்தகட்ட நிதிக் கொள்கை முடிவால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டும் இல்லாமல் திருமண சீசன் நெருங்குவதால் தங்கம் வாங்கும்போக்கு அதிகரிக்கும் என்பதால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய சந்தையில் ரூ. 29,516-க்கு வர்த்தகமாகி வரும் 10 கிராம் தங்கம், அடுத்த மாதத்தில் ரூ.30,750-ஐ தொடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close