Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக சந்தை பலவீனம்.. சென்செக்ஸ், நிப்டி ப்ளாட்-ல் நிறைவு!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (29.04.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி இறுதியில் ப்ளாட் ஆக நிறைவடைந்தது.



 

புளுசிப் நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ததன் எதிரொலி, ஜப்பான் மத்திய வங்கி முடிவு மற்றும் எப் அண்ட் ஒ எக்ஸ்பியரி போன்ற காரணங்களால் நேற்றைய இந்திய பங்குச்சந்தகள் இறக்க்கதில் வர்த்தகமாகி நிறைவடைந்தன.
இந்த நிலையில் வாரத்தின் இறுதி நாளான இன்று பங்குச்சந்தைகள் காலை முதலே ஏற்ற இறக்கத்தில் வர்த்தகமாகி வந்தது. தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், ஆட்டோ, வங்கி மற்றும் மூலதன பொருட்கள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை சற்று அதிகமாக குறைந்திருந்தது. நிறுவனங்கள் நிதிநிலை முடிவுகள் சரியாக இல்லாத காரணம் மற்றும் உலக சந்தை பலவீனமான நிலையில் வர்த்தகம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ், நிப்டி ப்ளாட் ஆக வர்த்தகமாகி நிறைவடைந்தது.  
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 3.52 புள்ளிகள் உயர்ந்து  25,606.62 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.55 புள்ளிகள் உயர்ந்து  7849.80 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 414.90 2.44%
கோடக் மகேந்திரா 717.15 2.24%
லூபின் 1,607.25 1.96%
டாடா பவர் 70.50 1.81%
சிப்லா 537.00 1.66%

விலை குறைந்த பங்குகள்

ஐடியா செல்லுலார் 118.55 -6.28%
ஹெச்சிஎல் டெக் 750.30 -6.20%
பார்தி ஏர்டெல் 363.60 -2.44%
பேங்க் ஆப் பரோடா 157.90 -1.65%
எஸ்பிஐ 189,00 -1.59%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ