Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுற்றுலா: சென்னைக்கு படையெடுக்கும் வெளிநாட்டு பயணிகள்....!

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நடப்பு 2016 ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி, பிப்ரவரி,மார்ச்) 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த கால கட்டத்தில் மொத்தம் 25.08 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார்கள். 2015 ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் இந்த எண்னிக்கை 22.81 லட்சமாக இருந்தது. 
 
 
 
2016 மார்ச் மாதத்தில் மட்டும் 8.17 லட்சம் வெளிநாட்டினர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருக்கிறார்கள். 2015 மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை 7.29 லட்சமாக இருந்தது. இது 12.1% வளர்ச்சியாகும். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் பட்டியலில் முதல் இடத்தில் அண்டை நாடான வங்காள தேசம் முதல் இடத்திலும், அடுத்த இரண்டாவது, மூன்றாவது இடங்கலில் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகள் உள்ளன.
2016 மார்ச் மாதத்தில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்களில் எந்த நாட்டினர் எத்தனை சதவிகிதம் என்கிற விவரம் கீழே உள்ளது.                
 
1. வங்காள தேசம்  14.07% 
 
2. இங்கிலாந்து  (UK)  13.16%
 
3. அமெரிக்கா   11.84%
 
4. ஜெர்மனி 3.74%
 
5. கனடா 3.57%
 
6. இலங்கை 3.48%
 
7. மலேசியா 3.45%
 
8. ரஷ்ய கூட்டமைப்பு 3.19%
 
9. சீனா 2.92%
 
10. பிரான்ஸ் 2.92%
 
11. ஆஸ்திரேலியா 2.83%
 
12. ஜப்பான் 2.43%
 
13. நேபாளம் 1.72% 
 
14. சிங்கப்பூர் 1.67%
 
15. தாய்லந்து 1.60%
 
 
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் அதிகமாக டெல்லி ஏர்போர்ட் வழியாகத்தான் வந்திருக்கிறார்கள். நான்காவது இடத்தில் சென்னை விமான நிலையம் இருக்கிறது. 
எந்த விமான நிலையம் மூலம் எத்தனை சதவிகிதம் பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார்கள் என்கிற விவரம்
 
1. டெல்லி ஏர்போர்ட் 33.82% 
 
2. மும்பை ஏர்போர்ட் 15.97%
 
3. ஹரிதாஸ்பூர் லேண்ட் செக் போஸ்ட் 7.83%
 
4. சென்னை ஏர்போர்ட்  7.30% 
 
5.பெங்களூரு ஏர்போர்ட் 5.44%
 
6. கோவா ஏர்போர்ட் 4.05% 
 
7. கொல்கத்தா ஏர்போர்ட்  4.02%
 
8. கொச்சின் ஏர்போர்ட் 3.76%
 
9. ஹைதராபாத் ஏர்போர்ட் 2.72%
 
10. கேடே ரயில் (Gede Rail) 1.67%
 
11. அமிர்தசரஸ் ஏர்போர்ட் 1.63%
 
12. அஹமதாபாத் ஏர்போர்ட் 1.63%
 
13. திருவனந்தபுரம் ஏர்போர்ட் 1.48%
 
14. திருச்சி ஏர்போர்ட் 1.34% மற்றும் 
 
15. கயா ஏர்போர்ட் 0.96%
 
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் இந்தியாவுக்கு வந்த அந்நிய செலாவணி மதிப்பு மார்ச் 2016-ல் மட்டும் ரூ. ரூ. 13,115 கோடி ஆகும். இது 2015 மார்ச் மாதத்தில் ரூ. 11,133 கோடியாக இருந்தது. 2016 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் மூலம் ரூ. 40,411 கோடி அந்நிய செலாவணி கிடைத்திருக்கிறது. இது 2105 ம் ஆண்டின் இதே மூன்று மாதக் காலத்தில் ரூ. 34,875 கோடியாக இருந்தது. இது 15.9% வளர்ச்சியாகும். 
 
- சி.சரவணன்
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ