Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.எஃப். வட்டி விகிதத்தை 8.8% ஆக உயர்த்தியது மத்திய அரசு


ஊழியர் வருங்கால வைப்புநிதி மீதான வட்டி விகிதத்தை 8.8% அதிகரித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு 3-வது முறையாக தங்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் பி.எஃப். எடுப்புத் தொகைக்கு வட்டி விதிப்பை கடும் எதிர்ப்பை அடுத்து கைவிட்டது. அதன் பிறகு பணம் எடுப்பதற்கு சில கெடுபிடிகளை விதித்தது பிறகு அதையும் கைவிட்டது. தற்போது 8.7% என்று குறைத்த வட்டியை மீண்டும் 8.8% என்று திருத்தியுள்ளது.

பல தொழிலாளர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் அறிவித்ததையடுத்து, அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் 8.8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ