Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சீனா பேக்டரி டேட்டா"வால் சரிந்தது சென்செக்ஸ்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (03.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


 


சர்வதேச சந்தை மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வாலும், முதலீட்டாளர்கள், முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதாலும் இன்றைய காலை நேர வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டது. இந்த நிலையில் சீனாவின் பேக்டரி டேட்டா ஏமாற்றம் அளித்ததால் சீன பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்தன.  இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் சரிவில் நிறைவடைந்தன.  
இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 207.27 புள்ளிகள் சரிந்து  25,229.70 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 58.90 புள்ளிகள் சரிந்து 7747.00 என்ற நிலையில் வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள்

அரவிந்தர் ஃபார்ம் 803.25 4.34%
பார்தி ஏர்டெல் 368.35 2.95%
பார்தி இன்ப்ராடெல் 383.65 2.13%
ஐடியா செல்லுலார் 119.90 1.87%
கிராஸிம் 4,142.45 1.76%

விலை குறைந்த பங்குகள்

கோல் இந்தியா 279.15 -3.29%
லூபின் 1,575.60 -2.68%
பி.எச்.இ.எல் 124.45 -2.55%
ஐசிஐசிஐ வங்கி 221.10 -2.49%
அம்புஜா சிமென்ட்ஸ் 218.60 -2.32%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ