Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"பனமா பேப்பர்" ஊழல் பட்டியலில் நடிகர் அஜய் தேவ்கான்!

உலகம் முழுவதும் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக ர்வதேச புலனாய்வு இதழியலாளர்கள் கூட்டியக்கம் (International Consortium Of Investigative Journalism) ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற தலைப்பில் பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

பனாமா பேப்பர்ஸ் பட்டியலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உதவியாளர், பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபி உட்பட பலர் இடம்பெற்றிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், டி.எல்.எஃப். உரிமையாளர் கே.பி.சிங், வினோத் அதானி, இந்தியா புல்ஸ் புரமோட்டர் சமீர் கெலாத்தி ஆகியோர் உட்பட 500 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன. 

இந்த நிலையில் பனமா பேப்பர் ஊழல் பட்டியலில் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் மெர்லிபோன் என்டர்டெனின்ட்மென்ட் நிறுவனத்தில் பங்குதாரராக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் சட்ட வழிகளின்படியேத்தான் செய்யப்பட்டுள்ளது. முறையாக கணக்குகளும் வரிகளும் தனது குடும்பத்தினரால் காட்டப்பட்டுள்ளதாக அஜய் தேவ்கான் கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ