Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

என்ன கொடுமை சார் இது... சுவாசக் காற்றடைத்த கேன்கள் இந்தியாவில் விற்பனை!


நம் நாட்டில் முதல்கட்டமாக மாசுபாடு அதிகம் நிறைந்த நகரமான தில்லியில் சுவாசக் காற்றடைத்த கேன்களை கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இறக்குமதி செய்து விற்பனையைத் தொடங்கியுள்ளது.


சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வியாபாரத்தைத் தொடங்கிய இந்நிறுவனம் இந்தியாவில் கால்பதித்துள்ளது. சுவாசக் காற்றடைத்த கேன்கள் தலா 12.50 ரூபாய்க்கு இந்திய சந்தையில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளது இந்நிறுவனம்.

காசு கொடுத்து பாட்டில் தண்ணீரை வாங்கி குடிக்க வேண்டுமா? என எண்ணிய காலம் மாறி, இப்போது அரசாங்கமே குடி தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் இதை வைத்தும் காசு பார்க்க நிறுவனங்கள் திட்டமிட்டு தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ