Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்வதேச சந்தையால் இந்திய சந்தை சரிவு!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (06.05.16) காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி வர்த்தகமாகி வருகின்றன. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்திருப்பதன் காரணமாகவே சந்தைகள் சரிவுடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 128.67 புள்ளிகள் சரிந்து   25,134.68 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 34.40 புள்ளிகள்  சரிந்து  7701.60 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பேங்க் ஆப் பரோடா 152.25 2.39%
ஏசிசி 1,415.35 1.47%
எஸ்பிஐ 182.85 1.39%
ஐசிஐசிஐ வங்கி 216.40 0.82%
யெஸ் பேங்க் 919.10 0.76%

விலை குறைந்த பங்குகள்

அதானி துறைமுகங்கள் 193.70 -2.17%
டெக் மஹிந்திரா 472.50 -1.43%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 2,891.00 -1.32%
விப்ரோ 536.10 -1.29%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 141.45 -1.26%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ