Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்‌ஷய திருதியை: மே 9-ல் கோல்டு இடிஎஃப் சிறப்பு வர்த்தகம்

அக்‌ஷய திருதியையை முன்னிட்டு மே 9 ம் தேதி கோல்டு இடிஎஃப் சிறப்பு வர்த்தகம் நடக்கிறது. அன்றைய தினம் இரவு 7 மணி வரை கோல்டு இடிஎஃப் டிரேடிங் நடக்கும் என்று என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ பங்குச் சந்தைகள் அறிவித்துள்ளன.

இந்தியாவில் தீபாவளி, தந்திராஸ் மற்றும் அக்‌ஷய திருதியை நாட்களில் தங்கம் வாங்குவது சிறப்பு என பொதுமக்கள் கருதுகின்றனர். இதனால் ஏராளமானோர் ஆர்வத்துடன் தங்கம் வாங்கி மகிழ்கின்றனர். இதுபோன்ற நாட்களில் கோல்டு இடிஎஃப் டிரேடிங் அதிகளவில் நடக்கிறது.

வழக்கமாக கோல்டு இடிஎஃப் வர்த்தகம் காலை 9.15 முதல் மாலை 3.30 வரை நடக்கும். இந்த நிலையில் அக்‌ஷய திருதியை முன்னிட்டு மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரைக்கும் கோல்டு இடிஎஃப் சிறப்பு வர்த்தகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ