Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதிநாள் இறக்கத்தில் நிறைவடைந்த சந்தை!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (06.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் காலை முதலே சரிவுடன் வர்த்தகமாகி வந்தன. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச சந்தையில் பலவீனமான நிலையில் வர்த்தகம் போன்ற காரணங்கள் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தின. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்டன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 33.71 புள்ளிகள் சரிந்து   25,228.50 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 2.05 புள்ளிகள்  சரிந்து  7733.45 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

கெயில் 383.85 4.95%
பி.எச்.இ.எல் 126.75 3.26%
டாடா பவர் 72.20 2.70%
எய்கர் மோட்டார்ஸின் 20,215.90 2.69%
ஏஷியன் பெயின்ட்ஸ் 889.05 2.54%

விலை குறைந்த பங்குகள்

டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 2,866.30 -2.16%
விப்ரோ 533.10 -1.84%
அதானி துறைமுகங்கள் 194.55 -1.74%
ஹெச்சிஎல் டெக் 722.60 -1.41%
டெக் மஹிந்திரா 473.05 -1.31%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ