Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தியேட்டரில் முதலீட்டாளர் விழிப்புணர்வு - செபி திட்டம்


முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு மற்றும் நிதி சார்ந்த அறிவை ஏற்படுத்த செபி திட்டமிட்டுள்ளது. இதற்காக திரையரங்குகள் மற்றும் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்த செபி முடிவு செய்திருக்கிறது.


தற்போது டிவி சானல்கள், ரேடியோ, பத்திரிகை உள் ளிட்டவை மூலமாக முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை செபி ஏற்படுத்தி வருகிறது. இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல செபி திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு மற்றும் நிதி சார்ந்த அறிவை ஏற்படுத்த சினிமா திரையரங்குகளில் விளம்பரம் மேற்கொள்ள செபி திட்டமிட்டுள்ளது. இது தவிர ஆசிரியர்கள், காவல் துறை என பிரத்யேகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செபி திட்டமிட்டு வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ