Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி

அக்ரி கமாடிட்டி

மென்தாயில், மஞ்சள், தனியா, சீரகம், சென்னா இந்த வாரம், எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து கேடியா கமாடிட்டி நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன் விளக்குகிறார்.

மென்தா ஆயில்!

மென்தா ஆயில் சந்தையில் ரூபாய் 850 என்ற நிலையில் வர்த்தகம் ஆகி கொண்டிருக்கிறது. மென்தாயில் விலையில் சற்று முன்னேற்றம் காணப்படுகிறது. இதற்கு காரணம் வரும் மாதங்களில் பருவமழை நன்றாக பெய்யும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பருவ மழை காலங்களில் மென்தா ஆயிலின் வரத்து குறையக் கூடும் எனவும், ஸ்பாட் சந்தைகளில் வரத்து தாமதமாகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஜீலை மாதம் வரை மென்தா ஆயில் விலை சற்று உயர்வாக இருக்கும் என்றும், தற்போது உள்ள விலையில் இருந்து ரூபாய் 1,100 என்ற நிலை வரை எட்ட கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

மென்தா ஆயில் விலை ஏற்றம் என்பது தற்காலிகமானது.  ஏனென்றால் இந்தியாவில் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலாவிற்கு பல மாநிலங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் புகையிலை நிறுவனங்களுக்கான மென்தா ஆயிலின் தேவை கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்துள்ளது. எனவே வரும் வாரத்தில் Buy அண்ட் Sell வழிமுறையை பின்பற்றலாம். மென்தா ஆயிலை ரூபாய் 850-க்கு வாங்கலாம். 820 ரூபாய்க்கு ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். வரும் வாரங்களில் ரூபாய் 890 வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

மஞ்சள்:

மஞ்சள் குவிண்டால் ரூபாய் 8,100 என்ற நிலையில் வர்த்தகம் ஆகிகொண்டிருக்கிறது. மஞ்சள் வரும் வாரத்தில் சற்று விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு காரணம் மஞ்சளின் வரத்து குறைந்துள்ளதே. மஞ்சளுக்கான தேவை மற்றும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடருமானால் வரக் கூடிய வாரங்களில் மஞ்சள் குவிண்டால் ரூபாய் 10,000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனினும் இந்த விலையேற்றம் தற்காலிகமானதே. ஏனெனில் இந்த ஆண்டு மஞ்சளில் உற்பத்தி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணிக்கையில் பார்க்கபோனால் 68 லட்சம் பைகள் உற்பத்தியாகும் என எதிர்பார்ப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 20 லட்சம் பைகள் அதிகம்.  வருகின்ற சில வாரங்களுக்கு மட்டும் இந்த விலை உயர்வு காணப்படும்.

தற்போது ஈரோடு மஞ்சள் சந்தையின் நிலவரப்படி விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் வட இந்திய வர்த்தகர்கள் தற்போது அதிக அளவில் கொள்முதல் செய்துவருகின்றனர். கடந்த வாரத்தில் மட்டும் 900 பைகளில புதிய மஞ்சளின் வரத்து இருந்ததாகவும் அதில் கிட்டதட்ட 70 சதவிகிதம் விற்பனையானதாகவும் தகவல் உள்ளது. எனவே வரும் வாரத்தில் Buy அண்ட் Sell வழிமுறையை பின்பற்றலாம். இதனை ரூபாய் 8100 க்கு வாங்கலாம். 7800 ரூபாய்க்கு ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும். வரும் வாரங்களில் ரூபாய் 8800 வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

தனியா:

தனியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வருடங்களில் குவிண்டால் ரூபாய் 16000 வரை உயர்வடைந்தது. இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுவது பல்கேரியா மற்றும் ருமேனியா நாட்டின் உற்பத்தி குறைவாக இருந்தது.  ஆகையால் உலக சந்தையில் தனியாவின் தேவை அதிகரிக்க இந்தியாவில் இதன் விலை குவிண்டால் ரூ. 16000 வரை எட்டியது. இதனால் இந்திய சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகம் காணப்பட்டது. அதாவது ரூ. 6000 முதல் 16000 வரை இந்த இரண்டு ஆண்டுகளில் தனியா வர்த்தகம் ஆனது. இந்த ஏற்ற இறக்கம் காரணமாக பெரும்பாலான தனியா வர்த்தகர்கள் வர்த்தகம் செய்வது தவிர்த்தனர்.

இதன் விளைவாக தனியாவின் கையிருப்பு குறைந்த அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி கையிருப்பு குறையுமானால் தனியாவின் உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி தேவையும் அதிகரிக்கும். ஒரு வேளை தேவை அதிகமானால் தனியாவின் விலை மீண்டும் உயரக்கூடும்.  அடுத்த 5 மாத காலத்தில் குவிண்டால் ரூபாய் 15000 வரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தற்போது  தனியாவின் விலை குவிண்டால் ரூபாய் 7000 ஆக வர்த்தகம் ஆகிகொண்டிருக்கிறது. ஜீன் மாத வர்த்தகத்தில்  அடுத்து வரும் வாரங்களில் குவிண்டால் ரூபாய் 6900 முதல் ரூபாய் 7600 வரை செல்ல கூடும். எனவே வரும் வாரத்தில்  Buy அண்ட் Sell வழிமுறையை பின்பற்றலாம். தனியாவை ரூ.6940க்கு வாங்கலாம். ரூ.6750 ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும். ரூ.7580 வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

சீரகம்:

சீரகத்தின் விலை சந்தையில் குவிண்டால் ரூ. 17000 என்ற நிலையில் உள்ளது. இது முந்தைய காலங்களை ஒப்பிடும் போது சற்று உயர்ந்து வர்த்தகம் ஆகி கொண்டிருக்கிறது. இதற்கான காரணங்கள் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் எதிர்பாரத மழையின் காரணமாக சீரகம் பயிர்கள் சேதமடைந்தது என தகவல்கள் வெளியானதாலும், தேவை அதிகம் இருப்பதனாலும் விலை உயர்ந்து வர்த்தகம் ஆனது. 

ஆனால் கடந்த வாரம் சற்று விலை வீழ்ச்சிடைந்தது.  இதற்கான காரணம் வளர்ந்த நிலையில் உள்ள பயிர்கள் சற்று சேதமடைந்துள்ளது என தகவல்கள் வெளியானது.  இதற்கான தாக்கம் ஸ்பாட் சந்தைகளில் ஏற்றுமதிக்கான தேவை குறைந்தது என செய்திகள் வெளியாயின.

இதன் காரணமாகவே விலைகள் சற்று வீழ்ச்சி எற்பட்டது. எனினும் வரும் காலங்களில் நல்ல தரமான சீரகம் ஸ்பாட் சந்தைகளில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று வர்த்தகர்களால் நம்பப்படுகிறது. ஆகையால் வரும் வாரங்களில் சீரகத்தை ரூ.16900க்கு வாங்கலாம். 16500 ரூபாய் ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும். வரும் வாரத்தில் ரூ. 17800 வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

சென்னா:

சென்னாவின் விலை சந்தையில் குவிண்டால் ரூபாய் 5500 என்ற நிலையில் வர்த்தகம் ஆகிகொண்டிருக்கிறது. சென்னாவைப் பொறுத்தவரை இந்தியாவில் பற்றாகுறை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக சென்னாவின் விலை உயர வாய்ப்புள்ளது.     இந்திய அரசாங்கத்தின் தலையீட்டால் சென்னாவின் விளிம்புத் தொகை 52 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால் சற்று விலைகள் கடந்த வாரத்தில் வீழ்ச்சியடைந்தது. 

சென்னாவின் விலையேற்றம் இந்தியாவில் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது. எனவே இந்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் சென்னா வர்த்தகம் ஆகி கொண்டிருக்கிறது. இது உள்நாட்டு தேவையை கருதும் போது உற்பத்தி குறைவாக உள்ளது. 

இதன் தாக்கமாக மத்திய அரசாங்கம் துவரம் மற்றும் உளுந்து ஆகியவைகளை மானிய விலையான 120 கிலோ என்ற விலையில் சுமார் 10400 டன் கையிருப்புகளை சில்லறை வர்த்தகம் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தகவலின்படி தமிழகத்திற்கு 1000 டன் துவரம் மற்றும் 5000 உளுந்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் துவரையின் தேவை 2000 டன் ஆகவும், உளுந்தின் தேவை 10000 டன் ஆகவும் உள்ளது.

சென்னாவைப் பொறுத்தவரை இதன் விலை குறையும்போது வாங்கலாம். தற்போதைய நிலையில் இருந்து ரூ.5400 வரும் போது வாங்கலாம். 5100 ரூபாய் ஸ்டாப் லாஸ் வைத்துக் கொள்ளவும். 5700 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

-சோ.கார்த்திகேயன்


விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ