Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வர்த்தகத்தில் கலக்கும் தைரோகேர்! பங்கு விலை 49% அதிகரித்தது

டயக்னாஸ்டிக் நிறுவனமான தைரோகேர் ரூ. 446க்கு சமீபத்தில் ஐபிஓ வெளியிட்டது. 73 சதவிகிதம் கூடுதலாக விண்ணப்பிக்கப்பட்டு முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.

இன்று (09.05.16) தொடங்கிய அதன் முதல் நாள் வர்த்தகத்திலேயே அதன் ஐபிஓ விலையைக் காட்டிலும் 49% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை முதலே சந்தை ஏற்றத்தில் இருப்பது தைரோகேர் வர்த்தகத்திற்கும் சாதகமாக உள்ளது.

டயக்னாஸ்டிக் தொழிலில் தைரோகேர் நிறுவனம், டாக்டர் லால் பாத்லெப்ஸ், எஸ் ஆர் எல் டயக்னாஸ்டிக்ஸ், மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் போன்றவற்றுடன் போட்டி போட்டு வருகிறது. தற்போது டயக்னாஸ்டிக் துறையில் இந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக இந்தப் பங்குக்கு தொடர் வரவேற்பு இருக்க வாய்ப்புள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ