Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காலையில் SELL.. மாலையில் BUY முதலீட்டாளர்கள் முடிவால் சந்தை சர்க்கஸ்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (10.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

வாரத்தின் முதல்நாளான நேற்று பங்குச்சந்தைகள் அதிகளவு ஏற்றத்துடன் முடிந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று பங்குச்சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் சரிவுடன் வர்த்தகமாகி வந்தன. ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை லாப நோக்கில் விற்பனை செய்ததால் இந்திய பங்குச்சந்தைகள் காலை நேரத்தில் இறக்கத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை நேர வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் மறுபடியும் பங்குகளை வாங்கி குவிக்க ஆரம்பித்ததால் இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 83.67 புள்ளிகள் உயர்ந்து 25,772.53 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.75 புள்ளிகள் உயர்ந்து 7887.80 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 2,924.45 2.97%
ஆக்சிஸ் வங்கி 487.95 2.27%
ஹெச்யூஎல் 862.45 2.00%
கிராஸிம் 4,215.80 1.98%
லார்சன் 1,320.05 1.97%

விலை குறைந்த பங்குகள்

டாடா மோட்டார்ஸ் 388.95 -3.57%
டாடா மோட்டார்ஸ் (டி) 281.00 -2.87%
ஹிண்டால்கோ 89.85 -2.02%
என்டிபிசி 140.65 -1.78%
ஓஎன்ஜிசி 207.90 -1.75%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ