Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப முடியாது! - பிரிட்டன் அடாவடி

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப முடியாது. இதுகுறித்து இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்தியாவை பிரிட்டன் கேட்டுக் கொண்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி அளவிற்கு கடன் பெற்று விஜய் மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து இவரை நேரில் ஆஜராகுமாறு மூன்று முறை அமலாக்கதுறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆஜராகாததால் இவரது பாஸ்போர்ட் முடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது. இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேசமயம் இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ