Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால் டிராப் விவகாரம்: டிராய் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!


செல்போன் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு, கால் டிராப் எனப்படும் அழைப்பு துண்டிப்பால் ஏற்படும் இழப்பீடுகளை அந்தந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டது.

இந்த உத்தரவை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் டிராய் உத்தரவிட்டிருந்தது. அழைப்பு துண்டிப்புக்கான இழப்பீடாக ரூ.1 முதல் அதிகபட்சமாக ரூ.3 வரை வழங்க தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டிராயின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அழைப்பு துண்டிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற டிராயின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ