Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகத்தால் சரிந்தது சென்செக்ஸ்! ஐஐபி டேட்டா எதிரொலி..

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (11.05.16) மாலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


அடுத்த நிதியாண்டில் இருந்து மொரிஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடுகள் மேற்கொள்ள மூலதன ஆதாய வரி விதிக்க இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் இறக்கத்துடன் வர்த்தகமாகி வந்தன.

இந்த நிலையில் நாளை மேக்ரோ ஐஐபி டேட்டா மற்றும் சிபிஐ டேட்டா வெளியிடுவதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இறக்கத்தில் காணப்படுகின்றன.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 175.51 புள்ளிகள் சரிந்து   25,597.02 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 38.95 புள்ளிகள் சரிந்து  7848.85 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஜீ எண்டர்டெயின் 447.95 7.27%
ஆக்சிஸ் வங்கி 498.20 2.10%
ஹிண்டால்கோ 91.60 1.95%
போஷ் 20,046.10 1.77%
கோடக் மகேந்திரா 731.55 1.20%

விலை குறைந்த பங்குகள்

பார்தி ஏர்டெல் 358.90 -2.70%
டாடா மோட்டார்ஸ் (டி) 273.85 -2.54%
எஸ்பிஐ 185.00 -2.37%
டாடா மோட்டார்ஸ் 379.85 -2.34%
பார்தி இன்ப்ராடெல் 371.00 -2.06%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ