Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியா - மொரீசியஸ் வரி விவகாரத்தில் இருந்து மீண்ட சந்தை!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (12.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

அடுத்தாண்டு முதல் இந்தியா - மொரீசியஸ் இடையே வரி தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட இருக்கிறது, அதன்படி மொரீசியஸ் வழியாக இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிதிக்கப்படும். இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறியதாலும் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.

இந்தியா - மொரீசியஸ் இடையே வரி தொடர்பான ஒப்பந்தம் எதிரொலி வாரத்தின் நான்காம நாளான இன்றும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இந்திய பங்குச்சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கின. அதுமட்டும் இல்லாமல் ஆசிய சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமான காரணத்தினாலும் இந்திய சந்தைகள் இறக்கத்தில் காணப்பட்டது. இந்த நிலையில் ராஜ்ய சபா Bankruptcy Code Bill-க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் விளைவாக, வங்கி பங்குகளில் வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் உயர்ந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 134.67 புள்ளிகள் உயர்ந்து 25,731.00 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 40.60 புள்ளிகள் உயர்ந்து 7735.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஐசிஐசிஐ வங்கி 229.15 2.32%
அதானி துறைமுகங்கள் 196.85 1.99%
ஏஷியன் பெயின்ட்ஸ் 925.50 1.94%
டாடா மோட்டார்ஸ் (டி) 278.65 1.75%
பவர் கிரிட் கார்ப்பரேஷன் 143.85 1.70%

விலை குறைந்த பங்குகள்

ஹெச்யூஎல் 854.00 -0.99%
ஜீ எண்டர்டெயின் 444.25 -0.83%
அரவிந்தர் ஃபார்ம் 810.80 -0.81%
டாடா ஸ்டீல் 327.85 -0.59%
கிராஸிம் 4,250.15 -0.34%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ