Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர சர்வதேச காவல் துறைக்கு வேண்டுகொள்!

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முன்னதாக வங்கிக் கடன் திருப்பி செலுத்தாமல் இருப்பதற்காக விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவேண்டும் என்று அமலாக்கத் துறை இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது. இது நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து மாற்று வழிகளில் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அதன்படி, மல்லையாவை இந்தியா கொண்டு வர உதவுமாறு இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் துறைக்கு மத்திய அமலாக்கத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ