Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பேங்க்ரப்ட்சி அண்ட் இன்சால்வன்சி கோட் பில் விளைவால் சென்செக்ஸ் சரவெடி!

 

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (12.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

அடுத்தாண்டு முதல் இந்தியா - மொரீசியஸ் இடையே வரி தொடர்பான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட இருக்கிறது, அதன்படி மொரீசியஸ் வழியாக இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிவிதிக்கப்படும். இந்த அறிவிப்பால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும், அந்நிய முதலீடு அதிகளவில் வெளியேறியதாலும் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.

இந்த நிலையில் ராஜ்ய சபாவில் பேங்க்ரப்ட்சி அண்ட் இன்சால்வன்சி கோட் பில் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் எளிதாக வணிகம் செய்யும் சூழல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகரித்து காணப்பட்டது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 193.20 புள்ளிகள் உயர்ந்து 25,790.22 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 51.55 புள்ளிகள் உயர்ந்து 7900.40 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

போஷ் 20,925.25 4.39%
டாக்டர் ரெட்டிகள் ஆய்வகங்கள் 2,971.45 3.58%
ஐசிஐசிஐ வங்கி 231.80 3.51%
ஏஷியன் பெயின்ட்ஸ் 928.80 2.31%
ஹிண்டால்கோ 93.40 1.97%

விலை குறைந்த பங்குகள்

அரவிந்தர் ஃபார்ம் 801.30 -1.98%
ஆக்சிஸ் வங்கி 492.55 -1.13%
எய்கர் மோட்டார்ஸின் 19,753.05 -1.12%
ஹெச்யூஎல் 853.00 -1.11%
எம் அண்ட் எம் 1,334.40 -1.02%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ