Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி

தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்று இயற்கை எரிவாயு இந்த வாரம், எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து KEDIA COMMODITY நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன் விளக்குகிறார்.

தங்கம்!
கடந்த வாரம் தங்கத்தைப் பொறுத்தவரை 30,168 ரூபாயிலிருந்து 29,670 வரை வர்த்தகம் ஆனது. வரும் வாரங்களில் தங்கம் விலை மேலும் குறைய அதிக வாய்ப்புள்ளது. இதற்கு என்ன காரணமெனில் வியாழக்கிழமையன்று வெளியான FOMC அறிக்கையில் 2 சதவிகிதம் பணவீக்கம் இருக்கும் என்றும், வரும் மாதங்களில் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.29,600 என்ற சப்போர்ட்டில் வர்த்தகமாகி வருகிறது. 29,600 என்பதை உடைக்கும் பட்சத்தில் 29,300 வரை குறைய அதிக வாய்ப்புள்ளது. தங்கத்தை ரூபாய் 30,200-க்கு விற்கலாம்.  வரும் வாரங்களில் ரூபாய் 29,620 வரை குறைய வாய்ப்புள்ளது. டார்கெட் 1 - 30,000, டார்க்கெட் 2- 29,850.



வெள்ளி!
கடந்த இரண்டு வாரங்களை ஒப்பிடும்போது இந்த வாரம் வெள்ளி விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வாரம் அதிகபட்சமாக 41,960 ரூபாய் வரை வர்த்தகமானது, குறைந்தபட்சமாக 40,500 வரை சரிந்து வர்த்தகமானது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் டாலர் இன்டெக்ஸ் சப்போர்ட் ஆக வர்த்தகமானது. இதுமட்டும் இல்லாமல் கடந்த வாரத்தில் பேஸ் மெட்டல்ஸ் கடுமையாக வீழ்ச்சியடைந்ததன் காரணமாக வெள்ளி விலையிலும் பாதிப்பை உண்டாக்கியது.
கடந்த வியாழக்கிழமையன்று வெளியான FOMC அறிக்கையில், பணவீக்கம் 2 சதவிகிதமாக இருக்கும் என்ற அறிவிப்பு டாலருக்கு அதிக சாதகமாக இருக்கும் என்பதால் கமாடிட்டி பொருட்களின் விலை இறக்கத்தை சந்தித்தது. வரும் வாரங்களில் வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது. வெள்ளியைப் பொறுத்தவரை SELL on RISE வழிமுறையை பின்பற்றலாம். வரும் வாரங்களில் ரூபாய் 40,200 வரை குறைய அதிக வாய்ப்புள்ளது. வெள்ளியை ரூபாய் 41,500 முதல் ரூ.41,400 வரை விற்கலாம். வரும் வாரங்களில் 40,400 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. டார்க்கெட் 1 - ரூ.41,100, டார்க்கெட் 2 - ரூ.40,750

கச்சா எண்ணெய்!
கச்சா எண்ணெயைப் பொறுத்தவரை சந்தை அதிக புல்லிஸ் ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 51 டாலர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்திய சந்தையில் 3,400 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெள்ளியன்று வெளியான FOMC அறிக்கையின்படி கச்சா எண்ணெயின் விலை சரிவைதான் சந்திக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் கச்சா எண்ணெயின் உற்பத்தி குறையும் என்று எதிர்பார்த்தார்கள், ஆனால் குறையவில்லை. டெக்னிக் லெவலில் கச்சா எண்ணெயின் விலை 44 டாலருக்கு மேல் நீடித்து வர்த்தகமாகி வருகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் புல்லிஸ் ஆக வர்த்தகமாகி வருகிறது. 42.50 டாலர் கீழே இறங்கினால் மட்டுமே மேலும் கச்சா எண்ணெயின் விலை இறங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆகையால் வரும் வாரங்களில் கச்சா எண்ணையின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கச்சா எண்ணையை BUY on DIP வழிமுறையை பின்பற்றலாம். வரும் வாரம் இந்திய சந்தையில் 3,050 ரூபாய்க்கு வாங்கலாம். 3,180 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரூபாய் 2,984 ஸ்டாப் லாஸ் வைத்துக்கொள்ளவும்.

இயற்கை எரிவாயு!

சென்ற வாரத்தில் இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை வீக் ஆக வர்த்தகமாகி வந்தது. கடந்த வாரத்தில் வெளியான இயற்கை எரிவாயு இன்வென்ட்டரி டேட்டா சிறிதளவுதான் சப்போர்ட் ஆக இருந்தது. சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு விலை 2.20 டாலர் விலையை எட்டவில்லை. சர்வதேச சந்தையில் 2.20 டாலர் என்பது ரெசிஸ்டன்ஸ் ஆக உள்ளது. இதை தாண்டி சென்றால்தான் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிக்கும். ஆனால், 2.20 டாலரை தாண்டி வர்த்தகமாவதற்கான எந்த ஒரு காரணிகளும் இல்லை. ஆகையால் 2.00 டாலர் வரை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. ஓவர் ஆல் டிரண்ட் வீக் ஆக உள்ளது. SELL on RISE வழிமுறையை பின்பற்றலாம். ரூ.143 முதல் ரூ.147 வரை விற்கலாம். ரூ.149 ஸ்டாப்லாஸ் வைத்துக்கொள்ளவும். வரும் வாரங்களில் ரூ.127 வரை குறைய வாய்ப்புள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ