Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றி சொல்லுங்களேன்?

முதலீட்டாளர்களின் விழிப்பு உணர்வுக்காக தங்களின் மொத்த நிர்வகிப்பு சொத்துக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்குவது வழக்கம்.

அதன்படி சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் செபி, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில் இரண்டு அடிப்படைப் புள்ளிகளை (0.02%) முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக்காக ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியாவிலுள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதற்காக ஒதுக்கும் நிதியின் மதிப்பு ரூ.140 கோடி. அந்த நிதியில் பாதி ஆம்ஃபிக்கு ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியை பயன்படுத்துவதற்கு ஆம்ஃபி தனி குழு அமைக்க உள்ளது.

இன்னொரு மியூச்சுவல் ஃபண்ட் தகவல்

மியூச்சுவல் ஃபண்ட்  முதலீட்டை அதிகரிக்க செபி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அது ஆன்லைன் மூலம் ஓராண்டில் ரூ.50,000 வரைக்கும் முதலீடு செய்யலாம் என்று இருக்கும் முதலீட்டு வரம்ப்பை செபி நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பான் கார்ட் இல்லாமல் ஆதார் கார்ட் எண் மூலம் ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதற்கு இரு முக்கிய நிபந்தனைகள் உள்ளன. அதாவது, முதலீட்டாளரின் வங்கி கணக்கு மூலம்தான் பணம் செலுத்த வேண்டும். அடுத்து முதலீட்டு அளவு நிதி ஆண்டில் ரூ.50,000 ஆக இருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ