Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு அப்பிளிகேஷன்!

இரவில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க ''ட்ரேக் மீ மொபி'' என்ற பெயரில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை பெங்களூர் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

பெங்களூரில் பெண்கள் மீதான அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இவர்கள் பாதுகாப்பாக வீடு சென்றடைய பெங்களூரு நிறுவனம் ஒன்று ''ட்ரேக் மி மொபி'' (track me mobi) என்ற பெயரில் புதிய அப்பிளிகேஷன் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இரவில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் பெண்கள், ஓட்டுனர் விவரம் என அனைத்தும் "QR CODE" டை ஸ்கேன் செய்து, அதில் கிடைக்கும் டிரைவர் குறித்த தகவல்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆட்டோவில் பயணி ஏறியதில் இருந்து இறங்கும் வரை வீட்டில் இருப்பவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர் பாதுகாப்பாக வீட்டுக்கு வருகிறாரா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close