Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

17வது மாதமாக ஏற்றுமதி சரிவு!


நம் நாட்டின் ஏற்றுமது கடந்த ஏப்ரல் மாதத்தில் 6.74 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

2014ம் ஆண்டு டிசம்பரில் இருந்தே ஏற்றுமதி சரிவை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மந்தம், பெட்ரோலியம் மற்றும் இன்ஜினியரிங் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் தேவை குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி 6.74 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த மாதத்தில் ஏற்றுமதி மதிப்பு 2,050 கோடி டாலராக குறைவடந்துள்ளது. தங்கம் இறக்குமதி 60 சதவிகிதம் சரிந்துள்ளதால் வர்த்த பற்றாக்குறையும் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக வர்த்தக பற்றாக்குறை 5.1 பில்லியன் டாலராக குறைவடைந்துள்ளது. இது இதற்கு முந்தைய மாதத்தில் 6.5 பில்லியன் டாலராக இருந்தது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ