Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"சாகர்மாலா"வால் தமிழகம் பயனடையும் - நிதின் கட்காரி தகவல்

ரூபாய் 80,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

சாலை மற்றும் ரயில் திட்டங்கள் - ரூ.45,000 கோடி

ஸ்டீல் கிளஸ்டர் - ரூ.10,500 கோடி

பவர் பிராஜெக்ட் கிளஸ்டர் - ரூ.7,350 கோடி

மேரிடைம் கிளஸ்டர் - ரூ.5,000

சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோகெமிக்கல் கிளஸ்டர் - ரூ.4,200 கோடி

காலணி மற்றும் தோல் கிளஸ்டர் - ரூ.1,880 கோடி

பெட்ரோகெமிக்கல் கிளஸ்டர் - ரூ.420 கோடி

போன்ற திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநில அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. எனினும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்காமல் திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறோம். சாகர்மாலா துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் நிச்சயம் அதிகளவில் பயனடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
 

 இதுமட்டும் இல்லாமல் தாமிரபரணி, மணிமுத்தார், காவிரி, பாலாறு, வைகை மற்றும் பவானி போன்ற முக்கிய ஆறுகளை பயன்படுத்தி நீர்வழி போக்குவரத்துகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ