Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய பங்குச் சந்தை-க்கு புதிய தலைவர் நியமனம்!

தேசிய பங்குச் சந்தை (NSE) புதிய தலைவராக அசோக் சாவ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காம்படிசன் கமிசன் ஆப் இந்தியா முன்னாள் தலைவராக இருந்த அசோக் சாவ்லா, இப்போது தேசிய பங்குச் சந்தை  (NSE)-ன் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம்தான் காம்படிசன் கமிசன் தலைவர் பொறுப்பில் இருந்து ஒய்வு பெற்றார் அசோக் சாவ்லா. இந்த நிலையில் தேசிய பங்குச் சந்தை (NSE) புதிய தலைவராக அசோக் சாவ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை செபி வழங்கியுள்ளது.

கடந்த மே 3 ம் தேதியிலிருந்த்து வரும் 2019 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி வரை தேசிய பங்குச்சந்தையின் தலைவராக செயல்படுவார் என்று என்எஸ்இ வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ