Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நேருவின் ஐந்தாண்டு திட்டம் இனி கிடையாதா? மாற்றியமைக்க மோடி முயற்சி!

இந்திய பிரதமராக நேரு பதவியேற்ற பிறகு ஐந்தாண்டு திட்டத்தை கொண்டுவந்தார். இந்த ஐந்தாண்டு திட்டம் கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய அரசு, தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்த்தது. இந்த முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் 1951-1956 வரை இருந்தது.  இப்போது பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் 2012-17 வரை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் 5 ஆண்டு திட்டத்தை 7 ஆண்டு திட்டமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நிதி ஆயோக் 2017-18 முதல் 2023-24 வரை ஏழாண்டு திட்டமாக செயல்படும் என்று தெரிகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ