Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தாமதமாகும் தென்மேற்குப் பருவமழை


           கடுமையான வெயிலில் மழையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகி உள்ளது.
             கேரளாவில்   ஜீன் 1-ம் தேதி ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட  தென்மேற்குப்  பருவமழை 6 நாட்கள்  தாமதமாகும் என்ற  தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாட்டின் மற்ற பகுதிகளிலும் பருவ மழை தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


          இதைப் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குனர்  ரத்தோர் கூறுகையில் " பருவமழை தொடங்க தாமதமாவது இயல்பானது. இந்த ஆண்டு ஜூன் 7 ம் தேதி பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றவர், மேலும்  வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக  தமிழ்நாட்டின் கடலோர  பகுதிகளில் கன மழையும், கர்னாடகா,கேரளாவின் சில பகுதிகளில்  மழை பெய்யவும் வாய்ப்புள்ளது" என்றார்.


2015 -ம் ஆண்டைத் தவிர கடந்த 11 ஆண்டுகளில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு சரியாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ