Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய வங்கிகள் வரலாற்றிலேயே அதிக நஷ்டமடைந்த வங்கி!

காலாண்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. வங்கிகள் சில முன்னேற்றம் அடைந்திருந்தாலும் பெரும்பாலும் நஷ்டத்தையே பதிவு செய்துள்ளன. இந்த நிலையில் இன்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு முடிவு வெளியானது. இந்திய வங்கிகள் வரலாற்றிலேயே அதிக நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ. 307 கோடி நிகர லாபம் அடைந்திருந்த பஞ்சாப் நேஷனல் வங்கி இந்த மார்ச் காலாண்டில் ரூ. 5,367 கோடி நிகர நஷ்டமடைந்துள்ளது. இதற்கு காரணம் அதன் வாராக் கடன் அதிகரித்ததுதான் எங்கிறது வங்கி தரப்பு. கடந்த டிசம்பர் மாத காலாண்டில் 8.47 சதவிகிதமாக இருந்த வாராக் கடன் வளர்ச்சி, மார்ச் மாத காலாண்டில் 12.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அடுத்தபடியாக பேங்க் ஆஃப் பரோடா ரூ. 3,342 கோடி நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close