Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்பு சோதனையில் தோற்ற 5 கார்கள்!

பொதுவாகவே கார் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் கார்களை விபத்துகளின் போது காரில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் வசதிகளுடன் தயாரிக்க வேண்டும் என்பது கட்டாயம். அதற்காக ஒவ்வொரு காரும் 'கிராஷ்' சோதனைக்கு உட்படுத்தப்படும். அந்தச் சோதனையில் வெற்றி பெற்று ரேட்டிங் பெற்றால் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும்.

இந்த நிலையில் டெல்லியில் இங்கிலாந்தைச் சேர்ந்த குளோபல் என்சிஏபி கார் சோதனை ஏஜென்சி நடத்திய 'கிராஷ்' சோதனையில் 5 இந்திய தயாரிப்பு கார்கள் தோல்வியடைந்து ஜீரோ ரேட்டிங்கில் உள்ளன. இந்தக் கிராஷ் சோதனையில் அதிவேகத்தில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் அந்த அழுத்தத்தைத் தாங்கி காருக்கும் காரில் இருப்பவர்களுக்கும் சேதம் ஏற்படாமல் இருக்கிறதா என்பது பார்க்கப்பட்டது.

இந்தச் சோதனையில் இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ரெனால்ட் க்விட், மாருதி சுசூகி, மாருதி செலிரியோ, மாருதி ஈகோ, மஹிந்த்ரா ஸ்கார்பியோ, ஹுண்டாய் இயோன் ஆகிய கார்கள் ஜீரோ ரேட்டிங்கைப் பெற்று தோல்வியடைந்துள்ளன. கார் வாங்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் ஆசையாக உள்ளது. ஆனால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில் பாதுகாப்பான கார் மிகவும் அவசியம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ