Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரகுராம் ராஜனை கவர்னர் பதவியிலிருந்து விலக்குவது குறித்து உங்கள் கருத்து என்ன?

ரகுராம்ராஜன் ஆர்பிஐ-ன் கவர்னராக செப்டம்பர் 2013-ல் பொறுப்பேற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பூத் வணிகப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் நீண்ட விடுப்பில் இந்தப் பதவியை ஏற்றுள்ளார். இவர் உலகப் பொருளாதார மேதைகளில் ஒருவர் என்பதை உலகமே அறியும். 2008-ல் பொருளாதாரம் சரியும் என இவர் முன்கூட்டியே கணித்துச் சொன்னதை உலகமே பிரமிப்புடன் பார்த்தது. இந்தியாவின் பணவீக்கத்தை உச்சத்துக்கு செல்லவிடாமல் பல வியூகங்கள் வகுத்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். இவருடைய மூன்றாண்டு பதவி காலம் வரும் செப்டம்பரில் முடிவடைகிறது. 


இந்நிலையில் ‘‘ரகுராம்ராஜன் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்; அமெரிக்க மனோபாவத்தில் சிந்திக்கிறார்’’ என்ற கருத்தை முன்வைத்து விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், இவரை கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளார் பாஜக-வின் ராஜ்ய சபா எம்.பி சுப்ரமணியன் சுவாமி.

சுப்ரமணிய சுவாமியின் இந்த விமர்சனம் சரியா? 
ராஜனின் சேவை தொடர வேண்டுமா?

சுவாமியின் விமர்சனம் குறித்த உங்களின் கருத்தை பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் வாயிலாக பதிவுசெய்யுங்கள்.

நீங்கள் உங்கள் பதில்களை பதிவு செய்ய வேண்டிய லிங்க்:

goo.gl/forms/GBd2KtCzzZLCXUCz2

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ