Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக அதிகரிக்கும்

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி தொடங்கி மார்ச் வரையான காலாண்டில், மதிப்பீட்டு காலத்தில் நாட்டின் வேளாண் உற்பத்தி எதிர்பார்த்தபடி இருந்ததால், ஜிடிபி வளர்ச்சி விகிதமும் அதற்கேற்ப அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், சரக்குப் போக்குவரத்து, பயணிகள் விமான சேவை போன்றவற்றில் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. ஆனாலும், சென்ற 2015ம் ஆண்டின் காலத்தைவிட மார்ச் காலாண்டில், ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7.8 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ