Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குறையும் கரும்பு நடவு: சர்க்கரை விலை உயருமா?

இந்தியாவில் கரும்பு நடவு செய்யும் பரப்பளவு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அளவுக்குக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் (2015-16) மொத்த 49.6 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு கரும்பு நடவு செய்யப்பட்டது.

சமீபத்திய ஆண்டுகளில் 50 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமாகவே கரும்பு நடவு  செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் இதுவரை வெறும் 39 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மட்டுமே கரும்பு நடவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் கரும்பு நடவு செய்யும் பரப்பளவு மிக அதிகமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு அந்த மாநிலத்தில் 9.54 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு விளைவிக்கப்பட்ட கரும்பு, இந்த ஆண்டில் வெறும் 6.5 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு மட்டுமே விளைவிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக கரும்பு நடவு செய்யும் பரப்பளவு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் ஆண்டில் சர்க்கரை விலை உயரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ