Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் சரவெடி; 570 புள்ளிகள் அதிகரித்த காரணம் இதுதான்!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (25.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என சிட்டி குழுமம் கணிப்பு, மோர்கன் ஸ்டான்லி இந்தியா குறித்த மதிப்பீடு, தனியார் நிறுவனமான ஸ்கைமெட் பருவமழை நன்றாக பெய்யும் என கருத்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 575.70 புள்ளிகள் உயர்ந்து 25,881.17 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 186.05 புள்ளிகள் உயர்ந்து 7934.90 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

டெக் மஹிந்திரா 528.50 10.05%
இன்டஸ் இன்ட் வங்கி 1,096.15 5.03%
ஐசிஐசிஐ வங்கி 235.00 4.65%
பி.எச்.இ.எல் 122.55 4.12%
பஜாஜ் ஆட்டோ 2,475.30 4.03%

விலை குறைந்த பங்குகள்

சிப்லா 469.80 -4.91%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ