Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவம்பர் 2015-க்கு பிறகு முதல் முறையாக நிப்டி 8,000 புள்ளிகள் தாண்டியது!

 
இந்திய பங்குச்சந்தைகள் இன்று (26.05.16) ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

இன்று மாதத்தின் இறுதி வியாழக்கிழமை எப் அண்ட் ஓ எக்ஸ்பியரி என்பதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் வர்த்தகம் செய்து வந்தனர். எனினும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், கச்சா எண்ணெய் விலை இந்தாண்டில் முதன்முறையாக ஒரு பேரல் 50 டாலரை எட்டியிருப்பதாலும் எண்ணெய் நிறுவனம் தொடர்பான பங்குகள் உயர்ந்ததால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக கடந்த நவம்பர் 05 ம் தேதி 2015-க்கு பிறகு தேசிய பங்குச்சந்தையான நிப்டி 8,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து வருகிறது.
தற்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 339.13 உயர்ந்து 26,220.21 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 89.25 புள்ளிகள் உயர்ந்து 8024.25 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

லார்சன் 1,449.00 12.19
எஸ்பிஐ 182.30 4.11
செல்லுலார் 113.85 3.93 ஐடியா
பி.எச்.இ.எல் 125.80 2.65
ஓஎன்ஜிசி 214.80 2.21

விலை குறைந்த பங்குகள்

என்டிபிசி 139.85 -1.41
ஹெச்சிஎல் டெக் 741.05 -1.11%
பார்தி இன்ப்ராடெல் 390.75 -1.04%
சன் பார்மா 779.40 -0.77%
கிராஸிம் 4,317.15 -0.61%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ