Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் டிக்கெட் வெயிட்டிங்கா... கவலைய விடுங்க, இனி ஜாலியா விமானத்தில் பறங்க!


ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டில் இருந்தால் விமானத்தில் பயணம் செய்யலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல அதிகமானவர்கள் ரயில் பயணங்களைத்தான் மேற்கொள்கிறார்கள. ஆனால், இந்த ரயில் பயனத்தின்போது டிக்கெட் என்பதுதான் பல நேரத்தில் சிக்கலாகிறது. அதாவது ரயில் டிக்கெட் புக் செய்தால் சில நேரங்களில் பயணத்தின் இறுதி நேரம் வரை டிக்கெட் உறுதி ஆகாமல் இருக்கும். இது போன்ற சமயங்கள் மாற்று ஏற்பாடு ஏதாவது செய்ய முடியுமா என யோசிப்போம். ஆனால் இனிமேல் இந்த கவலை இல்லை.

அதாவது ரயில் முதல் வகுப்பு டிக்கெட் உறுதியாகவில்லை எனில் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்யலாம். ஐஆர்சிடிசியும், ஏர் இந்தியாவும் இதற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் படி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது முதல்கட்டமாக இதை ராஜ்தானி ரயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு டிக்கெட் உறுதியாகவில்லை எனில் எந்தவிதமான கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். ஆனால் 2-ம், 3-ம் வகுப்புகளில் ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை எனில் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது ரூ.1,500, ரூ.2,000 வரை செலுத்த வேண்டியிருக்கும்.

டிக்கெட் வெயிட்டிங்கில் இருக்கும் பயணிகளின் விவரங்களை ஐஆர்சிடிசி, ஏர் இந்தியாவுக்கு அனுப்பும். விமானத்தில் செல்வதற்கு பயணி தயாராக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்படும். ஆனால் இது விமானத்தில் காலியாக இருக்கும் இருக்கைகளை பொருத்துதான் இந்த ஏற்பாடு செய்யப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இது செயல்படுத்தப்படும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ