Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

4 நாட்கள் தொடர்ச்சியாக சந்தை உயர்வு!


இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (27.05.16) காலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.


கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மே மாதத்திற்கான எப் அண்ட் ஓ டெரிவேட்டிவ் சென்ட்டிமென்ட்டாலும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் 50 டாலரை தொட்டிருப்பதாலும், எண்ணெய் நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும் வர்த்தகம் அதிக எழுச்சியுடன் முடிந்தன. அதுமட்டும் இல்லாமல் இந்தாண்டு பருவமழை நன்றாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளதும் பங்குச்சந்தைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் சர்வதேச சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி வருவதால் இந்திய பங்குச்சந்தைகள் முன்னேற்றத்துடன் அதிகரித்து காணப்படுகிறது.


இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 194.12 புள்ளிகள் உயர்ந்து 26,559.69 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 64.35 புள்ளிகள் உயர்ந்து 8131.15 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

பிபிசிஎல் 1,011.85 9.18%
சன் பார்மா 812.00 4.19%
அதானி துறைமுகங்கள் 191.10 3.41%
அரவிந்தர் ஃபார்ம் 769.25 3.32%
லூபின் 1,509.45 2.69%

விலை குறைந்த பங்குகள்

ஐடிசி 358.35 -1.13%
டெக் மஹிந்திரா 537.40 -0.90%
லார்சன் 1,464.00 -0.69%
என்டிபிசி 140.30 -0.64%
டாடா மோட்டார்ஸ் 397.35 -0.48%

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ