Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாரத்தின் இறுதிநாள் சென்செக்ஸ் சரவெடி...!

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (27.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.


கச்சா எண்ணெய் விலை மீண்டும் 50 டாலரை தொட்டிருப்பதாலும், எண்ணெய் நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும், வங்கி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டதாலும் வர்த்தகம் அதிக எழுச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன.

இதுமட்டுமின்றி இந்தாண்டு பருவமழை நன்றாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளதால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதிகரித்து வந்தன. இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகள் மந்த நிலையில் வர்த்தகமாகி வந்தபோதிலும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்ததால் இன்றைய இந்திய பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது. கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 286.92 புள்ளிகள் உயர்ந்து 26,653.60 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 87.00 புள்ளிகள் உயர்ந்து 8,156.65 என்ற நிலையில் வர்த்தகமானது.

விலை அதிகரித்த பங்குகள்

பிபிசிஎல் 1,012.00 9.19%
எஸ்பிஐ 195.90 6.38%
சன் பார்மா 824.95 5.85%
அதானி துறைமுகங்கள் 191.70 3.73%
ரிலையன்ஸ் 974.70 2.94%

விலை குறைந்த பங்குகள்

டாடா பவர் 72.60 -1.43%
ஓஎன்ஜிசி 213.00 -1.41%
டெக் மஹிந்திரா 535.90 -1.18%
ஆக்சிஸ் வங்கி 514.00 -0.96%
ஐடிசி 359.30 -0.87%
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ