Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி டிரேடிங்!

மெட்டல் & ஆயில் கமாடிட்டி

தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் மற்று இயற்கை எரிவாயு இந்த வாரம், எப்படி வர்த்தகமாகும் என்பது குறித்து கெடியா கமாடிட்டி (KEDIA COMMODITY) நிறுவனத்தின் சென்னை பிராந்திய மேலாளர் கே.சரவணன் விளக்குகிறார்.

தங்கம்!

எதிர்பார்த்த மாதிரியே கடந்த வாரம் 3% சரிவை சந்தித்து உள்ளது. இதற்கான முக்கிய காரணம், அமெரிக்காவிலிருந்து வெளியான புள்ளிவிவரங்கள்  கடந்த இரண்டு வாரங்களாக டாலருக்கு ஏற்றத்தை கொடுத்தது. அமெரிக்காவின் வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததைவிட சரிவடைந்தது. இதனால் டாலர் குறியீட்டு எண் ஏற்றத்தில் வர்த்தகம் ஆனது. இதன் தாக்கத்தினால் அமெரிக்காவின் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. இதன் விளைவாக தங்கம் வீழ்ச்சியுடன் வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

இதுபோல் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியினால் வெனிசூலா நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்வதற்காக வெனிசுலாவின் தங்க கையிருப்பில் இருந்த சுமார் 1.7 பில்லியன் டாலர் அளவுக்கான தங்கத்தை கடந்த புதன் அன்று அந்த நாடு விற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தங்கத்தை பொறுத்தவரை, விலை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடான சீனாவின் தங்க இறக்குமதி 4.2% சரிவடைந்துள்ளது.

தற்போது உள்ள நிலையில் தங்கம் 1208 டாலர் கீழ் வர்த்தகமானால், இனிவரும் வாரத்தில் 1,160 டாலர் வரை செல்ல வாய்ப்புள்ளது. எனவே, விலை உயரும்போது மட்டும் முதலில் விற்றுவிட்டு, பிற்பாடு விலை குறைந்தபின் வாங்கி (Sell on rise) நேர் செய்யும் வழிமுறையை பின்பற்றி வர்த்தகம் செய்யலாம்.  சர்வதேச சந்தையில் 1,236 டாலர் என்ற நிலை வந்ததும் விற்கலாம். 1208 டாலர் கீழ் வர்த்தகமாக அதிக வாய்ப்புள்ளது. தங்கத்தை ரூபாய் 29,200-க்கு விற்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.29,600-க்கு வைத்துக்கொள்ளவும். டார்கெட் - ரூ.28,200

வெள்ளி!

கடந்த வாரத்தில் தங்கத்தை போல் வெள்ளி விலையும் வீழ்ச்சி அடைந்தது. எஃப்.ஒ.எம்.சி.-ல் (FOMC) நிதி சார்ந்த கொள்கையில் எடுக்கப்பட்டிருக்கும் மாற்றங்களும், ஜூன் 14-15 தேதிகளில் எஃப்.ஒ.எம்.சி.-ல் அரையாண்டு கூட்டம்ம் நடைபெறயிருக்கிறது. இதில் கண்டிப்பாக வட்டி விகிதத்தை படிப்படியாக் உயர்த்த முடிவுகள் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் வெள்ளியின் விலையும் வரும் வாரங்களில் சரிவு ஏற்படக்கூடும். ஆனால், தங்கம்/வெள்ளி ரேஷியோவின்படி, வெள்ளியின் விலையில் வீழ்ச்சி குறைவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தற்போது உள்ள நிலையில் 16.42 டாலர் என்ற நிலையில் வெள்ளியை விற்கலாம். இது 16.10 டாலர் கீழ் வர்த்தகமானால், 15.70 டாலர் வரை செல்ல வாய்ப்புள்ளது. எனவே, விலை உயரும்போது விற்று, குறைந்தபின் வாங்கி நேர் செய்யும் வழிமுறையை பின்பற்றலாம். வெள்ளியை ரூபாய் 39,600-க்கு விற்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.40,500-க்கு வைத்துக்கொள்ளவும். டார்கெட்  - ரூ.38,000

கச்சா எண்ணெய்!

கடந்த வாரத்தில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை 50.17 டாலர் வரை வர்த்தகமானது. இது உள்நாட்டு விலையில் 3,377 வரை உச்சத்தை அடைந்தது. எனினும் இது தற்காலிக உச்சம்தான். கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச அளவில் ஏற்பட்ட பல நிகழ்வுகள் கச்சா எண்ணெய்யின் ஏற்றத்துக்கு காரணமாக அமைந்தது. இதற்கு முக்கிய காரணம், கனடாவில் நடந்த தீ விபத்தினால் சப்ளை குறைந்து, விலை 50 டாலர் வரை உயர்ந்தது. ஆனால், வரும் வாரத்தில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவடைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய தகவல்களின்படி, சவூதி அரேபியாவின் எண்ணெய் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் ஆசியா வாடிக்கையாளர்களுக்கு கச்சா எண்ணெய்யை பெரிய அளவுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சவுதி அராம்கோ நிறுவனம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அதன் உற்பத்தி அளவை 1 மில்லியன் பிபிடி அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் 49 டாலர் கீழ் வர்த்தகமானால் 44 டாலர் வரை செல்ல வாய்ப்புள்ளது. விலை உயரும்போது விற்று, குறைந்தபின் வாங்கி நேர் செய்யும் வழிமுறையை பின்பற்றலாம். கச்சா எண்ணெய்யை ரூபாய் 3,380-க்கு விற்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.3,500-க்கு வைத்துக்கொள்ளவும். டார்கெட்  - ரூ.3,050

இயற்கை எரிவாயு!

இயற்கை எரிவாயுவைப் பொறுத்தவரை, கடந்த வாரங்களில் விலை வீழ்ச்சி அடைந்து வர்த்தகமானது. வியாழன்று வெளியான கையிருப்பு குறித்த புள்ளிவிவரங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது. இதனால் வரும் வாரத்தில் விலை வீழ்ச்சி அடைவதற்கான வாய்ப்பு அதிகம். இந்த நிலையில், உலக அளவில் கடுமையான தற்ப வெப்பநிலை மாறுபாட்டை ஏற்படுத்திய எல்நினோ முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் பசிபிக் கடற்பகுதியில் மீண்டும் குளிர்ச்சி நிலவ துவங்கிவுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால் எல் நினோவைக் தொடர்ந்து ஐந்தாண்டு இறுதியில் லா நினோ எனும் குளிர் சலனம் ஏற்படும் என்று கூறியுள்ளனர். இதனால் அமெரிக்கா நாடுகளில் குளிர்ச்சியான பருவநிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கை எரிவாயுவின் தேவை அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, நீண்ட கால முதலீட்டுக்கு இயற்கை எரிவாயு தற்போது உள்ள விலையில் இருந்து அடுத்த ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் வரும் வாரத்தில் விலையில் சற்று வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயற்கை எரிவாயு  ரூபாய் 148-க்கு விற்கலாம். ஸ்டாப் லாஸ் ரூ.154  வைத்துக்கொள்ளவும். டார்கெட்  - ரூ.136

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ