Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் தொடருவாரா? பிரதமர் மோடி பதில்

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் ரகுராம் ராஜன் தொடருவாரா என்ற கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக பதிலளித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தை திட்டமிட்டே ரகுராம் ராஜன் சீர்குலைக்கிறார். அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட கீரீன் கார்டை தொடர்ந்து அவர் புதுப்பிக்க தொடங்கியதில் இருந்து அவர் மன ரீதியாக தன்னை முழு இந்தியராக உணரவில்லை. ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இவரை ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியன் சாமி கடிதம் எழுதி இருந்தார். இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் வால்ஸ்ட்ரீர் ஜர்னலுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார். அதில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜனை மீண்டும் தேர்வு செய்வதை நீங்கள் ஆதரிப்பீர்களா? என ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி, "இது நிர்வாகம் தொடர்பான விவகாரம். ஊடகங்களின் ஆர்வம் சார்ந்த ஒரு விஷயமாக நான் கருதவில்லை. ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் வரை உள்ளது" என கூறியுள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ