Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு! இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங்குக்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை

ரயில் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியே இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனில் பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளுக்கு 30 ரூபாய் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்படாது என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.


இது ஜூன் 1 ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன் டிக்கெட் கவுன்டரில் ரிசர்வ் செய்தால் ரூ.30 சர்வீஸ் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கார்டு பணப் பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்த முடிவை இந்தியன் ரயில்வே எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ