Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணவீக்கம் எனும் கேன்ஸர்! சிந்திக்க வைத்த பெங்களூரு கூட்டம்

 

நாணயம் விகடன் மற்றும் ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் பெங்களூரூவில் `வளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்கிற தலைப்பில் முதலீட்டாளர் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை நடத்தியது.

இதில் முதலில் பேசிய ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கர்நாடகா பிராந்திய தலைவர் விபின் பந்தாரி, “கொடிய நோயான  கேன்ஸரைக்கூட ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் குணப்படுத்திவிடலாம். ஆனால், பணவீக்கம் என்கிற நோய்க்கு ஒரே மருந்து நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக முதலீடு செய்வதே. இன்று 1 லட்சம் ரூபாயாக இருக்கும் பணத்தின் மதிப்பு, ஆண்டுக்கு 6% பணவீக்கத்தின் அடைப்படையில் கணக்கிட்டால், அடுத்த 20 வருடத்தில் வெறும் 29,011 ரூபாயாக இருக்கும்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற ஒரே வழி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதுதான். மியூச்சுவல் ஃபண்டில் நமக்கு தேவையான எல்லா வகையான முதலீடுகளும் இருக்கின்றன. சரியான ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்குங்கள். சம்பளம் வந்து செலவு செய்வதற்கு முன்னரே மியூச்சுவல் ஃபண்டிற்கான இ.சி.எஸ் வங்கி யிலிருந்து டெபிட் ஆகும் விதத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யப் போகும் இந்த சிறிய மாற்றம்தான், பின்னாளில் பெரிய பலனைத் தரும்’’ என்றார்.

அவரைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் மற்றும் ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் சொக்கலிங்கம் பழனியப்பன், “இந்தியா புலிப் பாய்ச்சலில் முன்னேறி வருவதை எஃப்.ஐ.ஐக்கள் நன்கு எல்லாம் உணர்ந்து, தங்கள் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம், இந்தியாவின் டாப் 500 நிறுவனங்களின் மொத்த பங்குகளில் 23 சதவிகித பங்குகளில் எஃப்.ஐ.ஐக்கள் முதலீடு செய்திருப்பதுதான். நாமும் நம் பங்குச் சந்தையின் ஏற்றத்தின் பலனை ரிஸ்க் குறைவாக எடுத்து அனுபவிக்க வேண்டுமென்றால், மியூச்சுவல் ஃபண்டுதான் சிறந்த முதலீடு. நிபுணர் களின் மேற்பார்வை, கூடுதலான வெளிப்படைத்தன்மை, செபியின் கண்காணிப்பு என பல பாசிட்டிவ்களைச் சொல்லலாம்’’ என்றார்.

நிறைவாக வாசர்கள் கேள்வி கேட்க, நிபுணர்கள் உற்சாகமாக விடை யளித்தனர்.

மு.சா.கெளதமன்

படங்கள்: க.தனசேகரன்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP