Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நோ ஸ்மோக்கிங்: மாதம் ரூ.3,000... 30 வருடம்... கோடியைத் தாண்டிய வருமானம்!

 

மே 31 - சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

ண்டு தோறும் மே 31-ம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.   இளம் வயதில் சும்மா ஒரு திரில்லுக்காகவோ அல்லது நண்பர்களிடமிருந்தோ கற்றுக் கொள்கிற புகைப் பிடிக்கும் பழக்கம் நாளடைவில் நம் வாழ்க்கையில் விடமுடியாத ஒரு பழக்கமாக மாறிவிடுகிறது.

இன்றைக்கு பலரின் ஆறாவது விரலாக இருப்பது சிகரெட்தான். மன உளைச்சலில் இருந்து விடுபடவும், ரிலாக்ஸாக இருக்கவும் புகைப் பிடிக்கிறேன் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்கிறார்கள்.   
  
மற்ற நோய்களால் ஏற்படுகிற மரணத்தைவிட புகைப் பிடிப்பதால் ஏற்படும் நோய்களினால் உண்டாகின்ற மரணங்கள் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

புகைப் பிடிப்பதால் நம்முடைய வாய் முதல் மார்பு, சிறுநீரகம், நுரையீரலில், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உண்டு. தவிர, ஆஸ்துமா, காசநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன.

புகைப் பிடிப்பதால் நம் உடல்நலத்துக்கு மட்டுமில்லாமல், நாம் விடுகிற புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் தீங்கு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்தகொண்ட பின்பும் பலரால் புகைப் பிடிப்பதை விடமுடிவதில்லை.

புகைப் பிடிப்பதை நிறுத்துவதால், நம் உடல்நலம் பாதுகாப்பாக இருப்பதுடன், இன்னொரு பெரிய நன்மையும் நமக்குக் கிடைக்கும். அந்த நன்மை என்னவென்று பார்ப்போம்.

 

ஒருவர் ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் 500 ரூபாயை புகைப் பிடிப்பதற்காக செலவு செய்கிறார்  என்று வைத்துக்கொள்வோம். புகைப் பிடிப்பதை நிறுத்துவதால், மாதம் தோறும் அந்த 500 ரூபாயை அவரால் சேமிக்க முடியும். இப்படி சேமிக்கும் பணத்தை மாதம்தோறும் எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், அதற்கு அதிகபட்சம் 12% கூட்டு வட்டி அடிப்படையில் வருமானம் கிடைத்தால், 10 வருடத்தில் ரூ.1,15,019-ஆக உயரும். அதுவே, 20 வருடம் எனில்,  ரூ.4,94,628-ஆக அதிகரிக்கும். 30 வருடங்கள் எனில், ரூ.17,47,482-ஆக பெருகும். (பார்க்க அட்டவணை)

இப்படி நமக்கு கிடைக்கிற வருமானத்தை நம் குழந்தைகளின் படிப்புச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் 31-ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்திலிருந்து புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு, அதன் மூலம் மிச்சமாகிற பணத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வோம். ஒரே கல்லில் உடல்நலம், பொருளாதார வளம் என்கிற இரண்டு மாங்காயை அடிப்போம்!

த.சக்திவேல்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ