Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ளூ சிப் பங்குகள் வாங்கி குவிப்பால் சந்தை அதிகரிப்பு!


மாலை 3:30 மணி நிலவரம்

இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய (30.05.16) மாலை நேர வர்த்தகத்தில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி நிறைவடைந்தது.

சர்வதேச பங்குச்சந்தை மற்றும் ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் காலை நேர வர்த்தகத்தில் அதிகரித்து காணப்பட்டது.

இதுமட்டுமின்றி முதலீட்டாளர்கள் ப்ளூ சிப் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி குவித்ததால் இந்திய பங்குச்சந்தை அதிகரித்து காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் அதிகரித்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் ஹிண்டால்கோ நிறுவனம் அதிகபட்சமாக 11 சதவிகிதத்துக்கும் மேல் வர்த்தகமானது.

இன்றைய வர்த்தகத்தைப் பொறுத்தவரை மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 72.00 புள்ளிகள் உயர்ந்து 26,725.60 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.85 புள்ளிகள் உயர்ந்து 8178.50 என்ற நிலையில் வர்த்தகமானது

விலை அதிகரித்த பங்குகள்

ஹிண்டால்கோ 102.80 11.86%
டாடா மோட்டார்ஸ் 423.00 4.73%
டாடா பவர் 75.45 3.93%
கோல் இந்தியா 292.30 3.91%
டாடா மோட்டார்ஸ் (டி) 281.60 3.64%

விலை குறைந்த பங்குகள்

பி.எச்.இ.எல் 120.55 -5.89%
டாடா ஸ்டீல் 321.90 -2.34%
ஜீ மகிழ்விக்க 443.30 -2.23%
மாருதி சுசூகி 4,069.15 -1.87%
ஹெச்டிஎப்சி 1,235.00 -1.64%

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ