Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாளை முதல் எக்ஸ்ட்ரா டாக்ஸ்: ஓட்டல், போன் செலவுகள் உயர்கிறது!

ஆடம்பர மற்றும் சேவை வரி உயர்வு ஜூன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஏற்கெனவே குறிப்பிட்டிருந்ததுபடி இந்த கூடுதல் வரி விதிப்பு அமலாகிறது.

இதன்படி ஓட்டல் உணவுகள், தொலைபேசி கட்டணங்கள், பயணக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ் போன்றவற்றின் சேவை வரி உயர்கிறது. சொத்துக்கள் வாங்குகிறபோதும் கிருஷி கல்யாண்’ சேவை வரி 0.50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இதன் மூலம் தற்போதுள்ள சேவை வரி 14.5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்கிறது.

மேலும் ரூ.10 லட்சத்துக்கும் அதிக விலையுள்ள கார்கள் வாங்குகிறபோது கூடுதலாக 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த கூடுதல் வரி கார் விற்பனையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும். கார் வாங்குபவர்களின் வருமான வரி கணக்கில் இந்த கூடுதல் வரி சரி செய்யப்படும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ