Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இ-லாக்கர் வசதி சிடிஎஸ்எல் அறிமுகம்

இ-லாக்கர் வசதியை சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (சிடிஎஸ்எல்) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 

முக்கியமான நிதி மற்றும் நிதி சாராத ஆவணம், தனிப்பட்ட தகவல்கௐளை முதலீட்டாளர்கள் எளிதாக சேமிப்பதற்கு ஏதுவாக இ-லாக்கர் வசதியை சிடிஎஸ்எல் தொடங்கியுள்ளது.  முதலீட்டாளர்கள் முக்கியமான நிதி மற்றும் நிதி சாராத ஆவணங்களை இ-லாக்கர் வசதி மூலம் அப்லோட், டவுன்லோட் செய்யவும், பார்வையிடவும் முடியும். சிடிஎஸ்எல் சேவையை ஏற்கனவே பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு இந்த இ-லாக்கர் வசதி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், எலக்ட்ரிக் பில், எரிவாயு பில், லீஸ் ஒப்பந்தம், திருமண சான்றிதழ், இந்திய வெளிநாட்டு குடியுரிமை அட்டை, பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற நிதி சாராத ஆவணங்களை இ-லாக்கர் வசதி மூலம் பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி வங்கி விவரங்கள், கால வைப்பு, மாத வருமானம் திட்டங்கள், கடன்/பற்று அட்டை தொடர்பான தகவல்கள், தபால் அலுவலகம் திட்டங்கள், காப்பீட்டுத் திட்டம் போன்ற வேறு எந்த நிதி சார்ந்த ஆவணங்களை இ-லாக்கரில் பதிவேற்றி சேமிக்க முடியும் என்று சிடிஎஸ்எல் தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ