Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுப்ரமணியன் சுவாமிக்கு அருண் ஜேட்லி கடும் கண்டனம்!

இந்திய பொருளாதாரத்தை திட்டமிட்டே ரகுராம் ராஜன் சீர்குலைக்கிறார். அமெரிக்க அரசால் வழங்கப்பட்ட கீரீன் கார்டை தொடர்ந்து அவர் புதுப்பிக்க தொடங்கியதில் இருந்து அவர் மன ரீதியாக தன்னை முழு இந்தியராக உணரவில்லை. ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள் தொடர்ந்து இந்திய பொருளாதாரத்தை பாதித்து வருகிறது. இவரை ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, சுப்ரமணியன் சுவாமி இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, "இந்தியப் பொருளாதாரத்தில், ரிசர்வ் வங்கியும், அதன் ஆளுநர் பதவியும் மத்திய அரசின் முக்கிய அங்கமாகும். எனவே, ரிசர்வ் வங்கி மற்றும் அதன் கவர்னர் மீதான எந்தவொரு விமர்சனத்தையும், யார் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் திட்டங்களையும், கொள்கைகளையும் விவாதிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசின் கொள்கைகளை ஆதரிக்கவும், அவற்றை விமர்சிக்கவும் மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், அது தனிநபர் மீதான விமர்சனமாக மாறிவிடக் கூடாது" என கூறியுள்ளார்.

ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்குமா? என அருண் ஜேட்லியிடம் கேட்டதற்கு, இது தொடர்பாக ஊடகங்களுடன் விவாதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ