Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் 5 லட்சம் வரை தங்க நகை வாங்கினால் வரியில்லை! அரசு அறிவிப்பு

ரூபாய் 5 லட்சம் வரை ரொக்கமாக தங்க நகை வாங்கினால் வரியில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுவரை ரூபாய் 2 லட்சம் வரை ரொக்கமாக தங்க நகை வாங்கினால் நகை வாங்குவதற்காக ரொக்கவரி (TCS) செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போது இதனை ரூபாய் 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (ஜூன் 1) முதல் நடைமுறைக்கு வருகிறது.

மத்திய நிதி அமைச்சர்  2016-17 ம் நிதி ஆண்டுக்கான  தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கம் மீதான கலால் வரியை ஒரு சதவிகிதம் உயர்த்தப்பட்டதை எதிர்த்து நகை கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி பலத்த எதிர்ப்பு வந்தனர். இதற்கு மத்திய அரசு தங்கம் மீதான கலால் வரி உயர்வு திரும்ப பெற முடியாது என அறிவித்தது.

இந்த நிலையில் தங்க நகை வாங்கினால் ரொக்கவரி (TCS) ரூபாய் 2 லட்சம் என்பதை ரூபாய் 5 லட்சம் வரை ரொக்கமாக தங்க நகை வாங்கினால் வரியில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ