Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சன் பார்மாவின் நிகர லாபம் 92% உயர்வு!

இந்தியாவின் பெரிய பார்மா உற்பத்தியாளரான சன் பார்சூட்டிக்கல்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (சன் பார்மா) நிறுவனத்தின் நிகர லாபம் 92 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

கடந்த மார்ச் 2015-ல் 889 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், மார்ச் 2016ல் 1,713 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த மார்ச் 2016 காலாண்டில் வருவாய் 25 சதவிகிதம் அதிகரித்து 7,634 கோடி ரூபாயாக இருப்பது தான் நிகர லாபம் அதிகரிக்க முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் ப்ளூம்பெர்க்-ன் சந்தை கணிப்பை, சன் பார்மாவின் வருவாயும், நிகர லாபமும் தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 2015ல் சன் பார்மா நிறுவனம், ரான்பேக்ஸியை கையகப்படுத்த ஏற்பட்ட செலவால் தான் வருவாய் குறைந்தது என்பதும் கவனிக்கத்தகக்து.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ