Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய நிறுவனங்களில் ஆர்.ஓ.இ உயர்கிறது!

இந்திய நிறுவனங்களின் ரிட்டன் ஆன் ஈக்விட்டி (Return On Equity - ROE) என்று அழைக்கப்படும் ஆர்.ஓ.இ அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள, லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு வங்கியான ஹாங்காங் ஷாங்காய் பேங்கிங் கார்ப்பரேஷன் (HSBC) தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஆர்.ஓ.இ என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகள் மூலம் திரட்டிய பணத்திலிருந்து எவ்வளவு லாபம் சம்பாதிக்கிறது என்பதை சொல்லும் ஒரு அளவீடு.

கடந்த 2007-ம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவின் ஆர்.ஓ.இ 20 சதவிகிதத்திலிருந்து சரிந்து 13 சதவிகிதமாக குறைந்தது. அதன் பிறகு 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆர்.ஓ.இ 14.1 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது 15 சதவிகிதத்தில் நிலை பெற்று வருகிறது என்பது தான் கவனிக்கத்தக்கது.

கடந்த 2013 ஆம் ஆண்டுகளில் உள்நாட்டில் ஏற்பட்ட போட்டிகள் போன்ற காரணங்களால் தான் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க முடியாமல் திணறியது என்று ஹெச்.எஸ்.பி.சி தெரிவித்திருக்கிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ